Wednesday, October 21, 2009

கொங்கு கோழி வறுவல்

கொங்கு கோழி வறுவல்

தேவையான பொருட்கள்

* கோழி - ஒன்று
* வெங்காயம் - 150 கிராம்
* தக்காளி - 150 கிராம்
* உப்பு - தேவையான அளவு
* மிளகு - 10
* காய்ந்த மிளகாய் - 4
* மல்லி - 2 மேசைக்கரண்டி
* மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
* தேங்காய் - அரை மூடி
* நெய் - 50 கிராம்

செய்முறை

* துருவிய தேங்காயையும், மல்லியையும் சேர்த்து ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
* மிளகு, மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்.
* கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரும்பியவாறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டு அத்துடன் கறியினையும் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
* சுமார் 20 நிமிடங்கள் கறி வெந்தபிறகு நறுக்கின தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடு தண்ணீர் தெளித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும்.
* பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.

Sunday, October 18, 2009

மெக்ஸிக்கன்


தேவையான பொருட்கள
கோழி - அரைக்கிலோ
பெரிய வெங்காயம்-ஒன்று
பூண்டு-இரண்டு பற்கள்
கிட்னி பீன்ஸ்-இரண்டு கோப்பை
குடமிளகாய்-ஒன்று
ஃபுரோஸன் மக்காசோளம்-ஒரு கோப்பை
சிக்கன் ஸ்டாக்- இரண்டு கோப்பை
மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள்-ஒரு தேக்கரண்டி
ஜாலபீனோ பெப்பர்-ஒன்று
துறுவிய பேக்கிங் சாக்லெட்- இரண்டு தேக்கரண்டி
நறுக்கிய தக்காளி- 398ml அளவு இரண்டு கேன்
புளித்த கிரீம்-இரண்டு மேசைக்கரண்டி
கொத்தமல்லி-ஒரு கட்டு
ஒரிகனோ தூள்-ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஆயில்-கால்க்கோப்பை
செய்முற
கோழியை சுத்தம் செய்து எலும்புகளில்லாமல் கைமா பதத்திற்க்கு நொறுங்க நறுக்கவும். அல்லது ரெடிமேடாக கொத்துக்கறியாக கிடைத்தால் அதையே வாங்கிக் கொள்ளவும்.
கிட்னி பீன்ஸ்ஸை முந்தின நால் இரவே ஊறவைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை .குடமிளகாய், மற்றும் ஜாலபீனோ பெப்பர் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லிய்யை நொருங்க நறுக்கி வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கோழிகறியைப் போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.தொடர்ந்து வெங்காயம், பூண்டு, குடமிளகாயைப் போட்டு வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புளித்த கிரீமைத்தவிர எல்லாப்பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்கு கிளறி விட்டு சிக்கன் ஸ்டாக்க் மற்றும் பீன்ஸ் வெந்த நீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடிப் போட்டு அரைமணி நேரம் வேக விடவும்.
கறி நன்கு வெந்து, கலவை கெட்டியானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.காரம் மேலும் தேவையென்றால் தேவையான மிளகுத்தூளை போட்டுக் கொள்ளலாம்.
சுவைய்யான இந்த மெக்ஸிக்கன் சில்லிய்யை கோப்பைகளில் ஊற்றி புளித்த கிரீமையும் நறுக்கிய கொத்தமல்லியையும் மேலாக போட்டு டோர்ட்டில்லா பிரெட்டுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
விருந்துக்களின் போது இந்த சிக்கன் சில்லியை ஒரு நாள் முன்பாகச் செய்து, நன்கு ஆறவைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்து தேவைபடும்போது சூடுபடுத்தி பரிமாறினால், சுவை அதிகமாக இருக்கும்.இதில் பிடித்தமான எல்லாவித இறைச்சியையும் சேர்த்து செய்யலாம். இறைச்சியை சேர்க்காமல் சைவமாகவும் செய்யலாம்.
வழங்கியவர
அகமொழி


மெக்ஸிக்கோவில் செய்ய கூடிய ஒரு உணவு.


மெக்ஸிக்கோவில் செய்ய கூடிய ஒரு உணவு.


தேவையான பொருட்கள
பாஸ்மதி அரிசி - 1 கப்
மிளகாய் வற்றல் - 10
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 2
குடமிளகாய் - 1 நீட்டமாக கட் செய்தது.
எண்னெய் - 3 தே.க
அஜினோமோட்டோ - 1/4 தே.க
செய்முற
முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிரியா வேகவைத்து கொள்ளவும்.
பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து கரகர அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை
போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் குடமிளகாயையும் போட்டு அதில் அரைத்த விழுதையும்
போட்டு பச்சை வாசனை போனவுடன் அஜீனோமோட்டையும் வெந்த
சாததையும் போட்டு நன்றாக கலக்கவும்.
கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் ஒரு மிளகாய் வற்றலை க்ரஷ்
செய்து போடவும்.
அந்த எண்ணெயை சாதத்தின் மேல் ஊற்றவும்.
நல்ல காரசாரமாக சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு:
இது கொஞ்சம் காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்

உருளைக் கிழங்கு ஆம்லெட்


உருளைக் கிழங்கு ஆம்லெட்

தேவையான பொருட்கள
உருளைக் கிழங்கு-350 கிராம்
முட்டை-6
சோயா சோஸ்-3 தே.க
நல்லெண்ணெய்-1 தே.க
மிளகு -1 தே.க
மிளகாய்த்தூள்-1 தே.க
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
பூண்டு-2 பல்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்
செய்முற
உருளைக் கிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து, தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.
வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி,சோயா சோஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுதூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெட்டிய உருளைக் கிழங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும்.
குறிப்பு:
இதை சோறு,புட்டுடன் சாப்பிடலாம்.
வழங்கியவர

நண்டு மிளகு சூப

நண்டு மிளகு சூப



தேவையான பொருட்கள
பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
செய்முற
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்கவும்.
அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
பிறகு சூடாக பரிமாறவும்.

நெல்லிக்காய் துவையல

நெல்லிக்காய் துவையல



தேவையான பொருட்கள
நெல்லிக்காய்-20
பெருங்காயம் -கொஞ்சம்
கடலை பருப்பு -2தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-5
கடுகு-கொஞ்சம்
உப்பு - 1/4தேக்கரண்டி
கறிவேப்பிலை -கொஞ்சம்
எண்னை-கொஞ்சம்
வெள்ளை உளுத்தம் பருப்பு -3தேக்கரண்டி
செய்முற
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கவும்
பாத்திரத்தில் எண்னை ஊற்றி நெல்லிக்காயை வத்க்கவும்
பாத்திரத்தில் எண்னை ஊற்றி உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் வறுக்கவும்
பிறகு எல்லாவற்றையும் அரைத்து கடுகு,கொஞ்சம்பெருங்காயம்கறிவேப்பிலை
கடலை பருப்பு போட்டு தாளித்து கொட்டவும்

Saturday, October 17, 2009

வெள்ளை சிக்கன் வறுவல

வெள்ளை சிக்கன் வறுவல


தேவையான
பொருட்கள

சின்ன
வெங்காயம் - 5

இஞ்சி
&பூண்டு விழுது - 1.5 ஸ்பூன்

மிளகுத்
தூள் - 1/2 ஸ்பூன்

ஜீரகம்
- 1/2 ஸ்பூன்

உப்பு
- 3/4 ஸ்பூன்

சிக்கன்
- 1/2 கிலோ

எலுமிச்சை

நீர் - 1/2 ஸ்பூன்

4 ஸ்பூன் எண்ணை

செய்முற

சிக்கன்
துண்டுகளில் இரண்டு மூன்று கீரல் போடவும்

சிக்கனில்
மேற்கண்ட எல்லாவற்றையும் அரைத்து பிரட்டவும்..1 மணிநேரம் ஊறவிடவும்

எண்ணையை
காயவிட்டு அதில் ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எண்ணை
விரும்பாதவர்கள் 1/2 ஸ்பூன் எண்ணை மட்ட்ம் சுடாக்கி அதில் துண்டுகளை ஒரு பிரட்டு பிரட்டி தீயை குறைத்து தண்ணீர் பெருகியபின் தண்ணீரை வற்றவிட்டு இறக்கவும்..

சுவையான
வறுவல் ரெடி

குறிப்பு
:

இது
ஸ்டார் ஹோடெல்களில் பரிமாறும் வகை அதனால் அப்படியே ஆதென்டிக் இந்தியன் ஸ்பைசெஸ் அதிகம் இருக்காது..ஒரு சேஞ்சுக்கு எப்போதாவது செய்யலாம் தவிற நம்ப சிக்கன் வறுவல்,சிக்கன் மசாலா அளவுக்கு வராது.

ஆந்திரா நண்டு மசால

ஆந்திரா நண்டு மசால



தேவையான பொருட்கள
பெரிய நண்டு - அரை கிலோ
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
ஏலக்காய் - 4
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
கிராம்பு - 4
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
செய்முற
முதலில் நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
இரண்டு தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு நண்டில் அரைத்த தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஊறவிடவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி மிக்ஸியில் இட்டு கசகசாவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இலேசாக வதக்கி அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பிறகு நண்டைச் சேர்த்து மூடி போட்டு சிவக்க வேக விடவும். சிவந்து வந்ததும் அடித்த முட்டையை வடிகட்டி மூலம் மெதுவாக நண்டில் வடிகட்டவும்.
முட்டை, நண்டு இரண்டும் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

கசகசா அல்வா

கசகசா அல்வா

வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கசகசா அல்வாவை சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

தேவையான
பொருட்கள

கசகசா
- 1 கப்

பால்
- 1 கப்

சர்க்கரை
- 1 கப்

நெய்
- 1/4 கப்

செய்முற
கசகசாவை பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு
நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடி
கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுது சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.

நன்கு
கிளறி ஒட்டாமல் வரும்போது இறக்கி எடுத்து வைக்கவும

பிராமணர்களின் பால் பாயசம

பிராமணர்களின் பால் பாயசம

குழைவாக
வைத்த சாதம் - ஒரு பெரிய கரண்டி

சரிக்கரை
- ஒன்றை பெரிய கரண்டி

பால்
- முக்கால் லிட்டர்

குங்மபூ
- கால் தேக்கரண்டி

ஏலக்காய்
- முன்று

நெய்
- முன்று தேக்கரண்டி

முந்திரி
- பத்து

கிஸ்மிஸ்
பழம் - பத்து(பிளக களர்)

செய்முற

ஒரு
கரண்டி குழைவாக வடித்த சாதம் சூடாக இருக்கும் போதே மசித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.

சர்க்கரை
ஒரு கரண்டிக்கு ஒன்றை கரண்டி சாதம் கரண்டி அளவே.

நெயில்
முந்திரி,கிஸ் மிஸ் பழம் வறுத்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

முதலி
பாலில் சர்க்கரை,குங்மப்பூ,ஏலக்காய் போட்டு நல்ல கலக்கிக் கொண்டு கொதிக்கவிட்டு,கொதி வந்ததும் மசித்து வைத்த சாததை அதில் பொட்டு நல்ல கட்டி தட்டாமல் கிளறவும்.

கடைசீயில்
வறுத்து வைத்துள்ள நெயில் முந்திரி,கிஸ்மிஸ் பழத்தை கொட்டவும்.

இல்லை
என்றால் பரிமாறும் போது கூட மேலே தூவி கொடுக்கலாம்.

குறிப்பு:

தேவைபட்டால் பாதம்,பிஸ்தா, அக்ரூட் போட்டுக்கொள்ளலாம்

சிலோன் தேங்காய் புலாவு

சிலோன் தேங்காய் புலாவு

தேவையான பொருட்கள

பாஸ்மதி ரைஸ் - 1 கப்

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கருவா - சிறிது

ரலம் - 1

கிராம்பு - 2

பச்சை மிளகாய் - 3


எண்ணெய் - 2 தேக்கரண்டி

கருவா - சிறிது

ரலம் - 1

கிராம்பு - 2

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - பாதி

கேரட் - 1

பச்சை பட்டாணி - 1/2 கப்

தேங்காய் பால் - 1 கப் (கெட்டியானது)

உப்பு - தேவையான அளவு

செய்முற

முதலில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை நீளமாக நறுக்கிகொள்ளவும்.

கேரட்டை சிறு துண்டாக நறுக்கிகொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ,வெண்ணெய் இரண்டையும் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கி, கேரட், பட்டாணி போட்டு வதக்கவும்.

பின் பாஸ்மதி ரைஸைபோட்டு கிளறி தேங்காய் பால்,1 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு சட்டியை மூடிவைத்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
--

Tuesday, October 13, 2009

தேங்காய் பால் ரசம

தேங்காய் பால் ரசம

புளி இல்லாமல் வித்தியாசமாக செய்யப்படும் இந்த ரசம், புளிப்பில் குறையலாமே தவிர ருசியில் எந்த வகையிலும் குறைவில்லாதது. செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது. செய்து பார்த்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள
தேங்காய் பால் - அரை கப்
பெரிய வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - அரை மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - பாதி
கிராம்பு - 3
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காய் பால், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பட்டை வெடித்து பொரிந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் தேங்காய் பால் ஊற்றி லேசாக கிளறி விட்டு பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு ரசம் ஒரு முறை நன்கு நுரைத்து பொங்கியதும் உப்பு போட்டு இறக்கி வைத்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விட கூடாது. கொதித்து விட்டால் தேங்காய் பால் திரிந்து, நன்றாக இருக்காது.

இந்த தேங்காய் பால் ரசத்தை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள். இதை சாதத்துடன் போட்டு சாப்பிடலாம். அப்படியே சூப் போல் அருந்துவதற்கும் மிகவும் நன்றாக இருக்கும். வாய் மற்றும் வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது.