Tuesday, October 13, 2009

தேங்காய் பால் ரசம

தேங்காய் பால் ரசம

புளி இல்லாமல் வித்தியாசமாக செய்யப்படும் இந்த ரசம், புளிப்பில் குறையலாமே தவிர ருசியில் எந்த வகையிலும் குறைவில்லாதது. செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது. செய்து பார்த்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள
தேங்காய் பால் - அரை கப்
பெரிய வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - அரை மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - பாதி
கிராம்பு - 3
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காய் பால், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பட்டை வெடித்து பொரிந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் தேங்காய் பால் ஊற்றி லேசாக கிளறி விட்டு பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு ரசம் ஒரு முறை நன்கு நுரைத்து பொங்கியதும் உப்பு போட்டு இறக்கி வைத்து விடவும். நீண்ட நேரம் கொதிக்க விட கூடாது. கொதித்து விட்டால் தேங்காய் பால் திரிந்து, நன்றாக இருக்காது.

இந்த தேங்காய் பால் ரசத்தை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள். இதை சாதத்துடன் போட்டு சாப்பிடலாம். அப்படியே சூப் போல் அருந்துவதற்கும் மிகவும் நன்றாக இருக்கும். வாய் மற்றும் வயிற்று புண்ணுக்கு மிகவும் நல்லது.

No comments:

Post a Comment